சர்வாதிகாரி ஹிட்லரின் பேச்சுக்கள், கைப்பட எழுதிய கடிதங்கள் 40 ஆயிரம் டாலருக்கு ஏலம் விடப்பட்டன.
2ம் உலகப் போர் தொடங்குவதற்கு முன்னர் 1939 இல் பேர்லினில் புதிய ராணுவ அதிகாரிகளிடம் ஹிட்லர் எழுதிக் காட்டிய ஒன்பது பக்க கையெழுத்துப் பிரதி 40 ஆயிரத்து 300 அமெரிக்க டாலர்களுக்கு விற்பனையானது.
இந்த நிலையில் ஹிட்லரின் கடிதங்களை ஏலம் விடுவதற்கு பல்வேறு யூத அமைப்புகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன.
கடிதங்களில் உள்ள சாராம்சங்கள் வெளியானால் மீண்டும் நாஸி அமைப்பு தலைதூக்கக் கூடும் என அந்த அமைப்புகள் கவலை தெரிவித்துள்ளன.