கொரோனா ஊரடங்குக்கு மத்தியில், சிங்கப்பூர், ஜெர்மனி இடையே, நேரடி விமானப் போக்குவரத்தைத் தொடங்க பரஸ்பரம் ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது.
இதற்கு, பசுமை வழித்தடம் என பெயரிடப்பட்டுள்ளது. இருப்பினும், அது, பொது பயணிகளுக்கான விமான சேவையாக இருக்காது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்தியாவசிய வணிக மற்றும் வர்த்தக நோக்கத்திற்காகவும், பரஸ்பர அலுவலகப் பணிநிமித்தமாகவும், செல்பவர்களுக்காக, மட்டுமே, நேரடி விமான சேவை, அனுமதிக்கப்படும் என்றும், கூறப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, சிங்கப்பூர்-ஜெர்மனி இடையே உடன்பாடு எட்டப்பட்டிருப்பதோடு, இருதரப்பிலும், கொரோனா தடுப்பு விதிமுறைகளை, கண்டிப்பாக பின்பற்றப்பவும் ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது.