அதிபர் தேர்தலுக்கான இறுதி மற்றும் இரண்டாம் கட்ட நேரடி விவாதத்தில், ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடனுடன் வாக்கு மோதலில் ஈடுபட்ட அதிபர் டிரம்ப், இந்தியாவில் காற்று மண்டலம் அசுத்தமாகி விட்டது என கூறி தேவையற்ற சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளார்.
நேற்று டென்னசேயில் உள்ள நாஷ்வில்லேயில் நடந்த விவாதத்தில், புவி வெப்பமயமாதல் பற்றி பேசும் போது கார்பன் வாயுக்களால் காற்று மண்டலம் மாசடைவதை தடுக்க தாம் பல நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக டிரம்ப் கூறினார். அப்போது, இந்தியாவின் காற்றுமண்டலம் அருவருக்கத்தக்க ஒன்றாக உள்ளது என அவர் விமர்சித்தார். பதிலுக்கு கொரோனாவில் இருந்து தன்னை காப்பாற்றிக்கொள்ள இயலாத டிரம்ப் அதிபர் பதவிக்கு லாயக்கற்றவர் என ஜோ பைடன் அதிரடியாக பேசினார்.