பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறல்களுக்கு எதிராக ஆக்ரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள முஸ்லீம்கள் அல்லாத சிறுபான்மை இனத்தவர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அக்டோபர் 22ம் தேதியை கருப்பு தினமாக அறிவித்துள்ள அவர்கள் இந்நாளில் காஷ்மீரின் ஒரு பகுதியை ராணுவ பலத்துடன் பாகிஸ்தான் ஆக்ரமிப்பு செய்ததைக் கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பிரதமர் இம்ரான் கானுக்கு எதிராக பாகிஸ்தானில் எதிர்க்கட்சியினர் ஓரணியாகத் திரண்டு பிரம்மாண்டமான போராட்டம் நடத்தி வரும் நிலையில் ஆக்ரமிப்பு காஷ்மீரிலும் போராட்டம் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.