கொரோனா பரவும் முன்னே உலகம் முழுவதும் 35.6 கோடி குழந்தைகள் வறுமையில் வாடி வந்ததாக ஐ.நா. குழந்தைகள் நல அமைப்பு கூறியுள்ளது.
இதுகுறித்து யுனிசெப் திட்ட இயக்குனர் சஞ்சய் விஜேசேகரா விடுத்துள்ள அறிக்கையில், உலகம் முழுவதும் 6 குழந்தைகளில் ஒருவர் என்ற விகிதத்தில் வறுமையில் வாடியதாக கூறப்பட்டுள்ளது.
தற்போதைய பொருளாதார சிக்கலால் இந்த எண்ணிக்கை மிக அதிகமாக உயர்ந்திருப்பதாகவும், வறுமையை ஒழிக்க சர்வதேச அளவில் நடவடிக்கைகளை எடுக்காவிட்டால் நிலைமை இன்னும் மோசமாகும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
உலக அளவில் கொடிய வறுமையில் தள்ளப்பட்டு உள்ளவர்களில் 50 சதவீதம் பேர் குழந்தைகள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.