தேநீர் குடிப்பதும், ஆப்பிள் சாப்பிடுவதும் ரத்த அழுத்தத்தைக் குறைக்கவும், இதய நோய்களை எதிர்த்துப் போராடவும் உதவும் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.
இங்கிலாந்து மற்றும் அமெரிக்க ஆய்வாளர்கள் இணைந்து சுமார் 25 ஆயிரம் பேரின் உணவுப் பழக்கவழக்கங்கள் குறித்து ஆய்வு நடத்தினர்.
அதில் ரத்தத்தில் உள்ள பாதரசத்தின் அளவு குறிப்பிட்ட அளவிற்கு கீழே குறைந்தால் ரத்த அழுத்தம் வருவதைக் கண்டறிந்தனர்.
ஆனால் ஆப்பிள், பெர்ரி மற்றும் தேநீர் போன்றவற்றில் காணப்படும் ஃபிளவனோல்கள் எனப்படும் பொருள் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவதில் பெரும்பங்கு வகிப்பது தெரிய வந்துள்ளது.