ஆப்பிரிக்க நாடான எத்தியோப்பியாவில் கடந்த 25 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு உணவுப் பயிர்களை வெட்டுக்கிளிகள் நாசம் செய்துள்ளன.
இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள, ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பு, பாலைவன வெட்டுக்கிளிகளால் 49 லட்சம் ஏக்கர் விவசாய நிலம் பாதிக்கப்பட்டுள்ளாதாகத் தெரிவித்துள்ளது.
ஒரு சதுர கிலோ மீட்டரில் வெட்டுக்கிளிகளால் நாசம் செய்யப்பட்ட உணவு 35 ஆயிரம் மனிதர்களுக்கு உணவாகும் என்றும், தற்போது மழைக்காலம் தொடங்குவதால் வெட்டுக்கிளிகள் பரவல் நாடு முழுவதும் அதிகரிக்கும் அபாயம் இருப்பதாகவும் அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.