நான்கு ஆண்டு பயணத்திற்குப் பிறகு நாசாவின் ரோபாட்டிக் விண்கலமான Osris-Rex, Bennu என்கிற குறுங்கோளில் இருந்து அதன் மண்ணை சேகரித்துள்ளது. அதற்காக தனது 11 அடி நீளமுள்ள ரோபாட்டிக் கையால், Bennu-வின் நிலப்பரப்பை 5 விநாடிகள் தொட்டது Osris-Rex விண்கலம்...
60 கிராம் எடைக்கு மண் மாதிரியை சேகரித்துள்ள Osris-Rex விண்கலம் வரும் 2023 ல் பூமியை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மண்ணை வைத்து நடத்தப்படும் ஆய்வு சூரிய குடும்பம் எப்படி தோன்றியது என்ற புதிரை விடுவிக்க உதவும் என விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.
4.5 பில்லியன் வருடங்களுக்கு முன்னர் சூரியன் தோன்றியபோது ஏற்பட்ட கழிவுகளே குறுங்கோள்களாக உருமாற்றம் பெற்றன என கூறப்படுகிறது. கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் பூமியை பலமுறை மோதிய இந்த குறுங்கோள்கள், நீரையும், உயிர்வாழ்வுக்கான ஆர்கானிக் அம்சங்களையும் கொண்டு வந்து போட்டிருக்கலாம் எனவும் விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.