பொலிவிய அதிபர் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடைபெற்றதாகக் கூறி ஆயிரக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த 18ம் தேதி நடைபெற்ற அதிபர் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில், சோசலிஸ்ட் கட்சி வேட்பாளர் லூயிஸ் ஆர்சே வெற்றி பெற்றதாக முதற்கட்ட முடிவுகள் தெரிவித்தன.
ஆனால், தேர்தல் முடிவுகள் கள நிலவரத்தை பிரதிபலிக்கவில்லை எனவும், வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடைபெற்றதாகவும் கூறி, பொலிவியாவின் முக்கிய நகரங்களில் தேசியக்கொடிகளை கைகளில் ஏந்தி ஆயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.