நைஜிரியாவின் லாகோஸ் நகரில் காவல்துறையினரின் அத்துமீறல்களைக் கண்டித்து ஆயிரக்கணக்கானோர் சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
அப்போது கூட்டத்தைக் கலைக்க ராணுவம் வரவழைக்கப்பட்டது. இருபது வீரர்கள் கூட்டத்தின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
இதனால் போராட்டம் நடத்திய கூட்டத்தினர் அங்கும் இங்கும் சிதறி ஓடினர். தொடர்ந்து அங்கு துப்பாக்கித் தோட்டாக்கள் சுடப்படும் ஓசை கேட்டதால் பதற்றமான சூழல் நிலவியது.
இதில் பத்து பேர் சுடப்பட்டதாக நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர்.