அமெரிக்கத் தயாரிப்பான புகாட்டி கார் உலகிலேயே அதிக வேகமாகச் சென்று சாதனை படைத்துள்ளது.
எஸ்எஸ்சி புகாட்டி நிறுவனம் தனது புதிய காரின் வேகத்தை சோதனை செய்து பார்க்க விரும்பியது. இதற்காக இங்கிலாந்து கார் பந்தய ஓட்டுநர் ஆலிவர் வெப் வரவழைக்கப்பட்டார். லாஸ்வேகஸ் புறநகர் பகுதியான நெவாடா என்ற இடத்தில் இந்தக் கார் இயக்கப்பட்டது.
இந்தக் காரின் வேகம் 15 ஜிபிஎஸ் கருவிகள் மற்றும் செயற்கைக் கோள் உதவியுடன் கணக்கிடப்பட்டது. இறுதியில் மணிக்கு 530 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்பட்டு புதிய சாதனை படைத்தது