அமெரிக்க அதிபர் டிரம்ப் தமது பிரச்சாரத்தின் போது அமெரிக்காவின் மூத்த மருத்துவ நிபுணர் டாக்டர் ஆன்டனி பாவுசி Dr. Anthony Fauci யை முட்டாள் என்று கடுமையாக விமர்சித்தார்.
இதற்கு மருத்துவ நிபுணர்களிடையே கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. கொரோனா தொற்று நோய் இரண்டு லட்சம் இருபதாயிரம் அமெரிக்கர்களைக் கொன்று விட்டதாக டாக்டர் பாவுசி கூறியிருந்தார்.
இதனால் அவர் மீது டிரம்ப் தனிப்பட்ட முறையில் தாக்குதல் தொடுத்ததாக கூறப்படுகிறது.கொரோனாவுடன் நாடு போராடிக் கொண்டிருக்கும் போது மருத்துவ நிபுணர்களை வசை பாடுவது மக்கள் உயிருடன் விளையாடும் செயலாகும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்