குறுகிய காலத்தில் பணம் ஈட்ட பலரும் அரசியலைப் பயன்படுத்தி வரும் நிலையில், இங்கிலாந்துப் பிரதமரோ தனக்கு ஊதியம் போதாதால் பதவியை ராஜினாமா செய்யத் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கன்சர்வேடிவ் கட்சித் தலைவராக பொறுப்பு எற்பதற்கு முன்னதாக போரிஸ் ஜான்சன் ஆண்டுக்கு, சுமார் 4 கோடியே 70 லட்சம் வரையில் வருமானம் ஈட்டியதாகவும், பிரதமர் பதவியேற்ற பிறகு சுமார் ஒரு கோடியே 30 லட்ச ரூபாய் மட்டுமே ஊதியமாக பெறுவதாகவும் கூறப்படுகிறது.
ஆறு குழந்தைகள் இருப்பதால் இந்த சம்பளம் போதவில்லை என்றும், அடுத்தாண்டு பதவியில் இருந்து விலக போரிஸ் முடிவு செய்துள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.