பாரிஸில் கொல்லப்பட்ட ஆசிரியருக்கு ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
பாரீஸின் பள்ளியொன்றில் ஆசிரியராகப் பணியாற்றிய சாமுவேல் பட்டி (Samuel Paty), வகுப்பு ஒன்றில் முகமது நபி குறித்த கேலிச் சித்திரங்களை மாணவர்களுக்கு காட்டியதால், 18 வயது இஸ்லாமிய இளைஞரால் கொல்லப்பட்டார்.
இந்த நிகழ்வில் இளைஞரை போலீசார் சுட்டுக் கொன்றனர். ஆசிரியர் கொலை பிரான்சில் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் ஆசிரியருக்கு இறுதி மரியாதை செலுத்தப்பட்டது.