பெரு நாட்டில் பெரிய பூனை வடிவத்திலான மலைப்பாதையை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
தலைநகர் லிமாவுக்கு அருகே உள்ள மலையில் சுமார் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இந்த பிரம்மாண்ட அளவிலான பூனையின் வடிவம் செதுக்கப்பட்டிருக்கலாம் என கலாச்சார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இயற்கை சீற்றங்கள் மற்றும் கால மாற்றத்தின் காரணமாக மறைந்து போன சுமார் 120 அடி நீளம் கொண்ட இந்த மலைப்பாதையை, ஆராய்ச்சி ஒன்றிற்காக சுத்தம் செய்யும் போது தொல் பொருள் ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர்