பிரான்ஸில் வரலாற்று ஆசிரியர் ஒருவர் தலை துண்டிக்கப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து முக்கிய நகரங்களில் ஆயிரக்கணக்கானோர் கூடினர்.
பாரிஸில் பள்ளி ஆசிரியராக பணியாற்றிய சாமுவேல் பட்டி, வகுப்பு ஒன்றில் முகமது நபி குறித்த கார்ட்டூன்களை மாணவர்களுக்கு காட்டியதால் ஆத்திரமடைந்த இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த 18 வயது இளைஞனால் அவர் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.
இது பிரான்ஸில் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், பாரிஸ், லியோன், மார்சேய் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் கூடிய ஆயிரக்கணக்கானோர், கருத்து சுதந்திரத்தின் மீதான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவித்து குரல் எழுப்பினர்.