மெக்சிகோ முன்னாள் பாதுகாப்பு அமைச்சர், போதைப்பொருள் மற்றும் பண மோசடி குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டார்.
ஆயுதப்படையில் 54 ஆண்டுகள் பணியாற்றியவரும் 2012 முதல் 2018 ஆம் வரை தேசிய பாதுகாப்பு செயலாளராக பணியாற்றியவருமான 72 வயதான சீன்ஃபுகோஸ் செபெடா (Cienfuegos Zepeda), அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் சர்வதேச விமான நிலையத்துக்கு வந்த போது கைது செய்யப்பட்டார்.
மெக்சிகோவில் நடக்கும் வன்முறைகளுக்கு முக்கிய காரணமாக கருதப்படும் போதைப்பொருள் சந்தை செயல்பட, லஞ்சம் வாங்கிக் கொண்டு அனுமதி அளித்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.