பாகிஸ்தானில் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் மருமகன் தங்கியிருந்த ஓட்டல் அறைக்கதவை உடைத்து அவரை போலீசார் கைது செய்தனர்.
இம்ரான்கான் அரசுக்கு எதிராக நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சி உள்ளிட்ட 11 எதிர்க்கட்சிகள் சேர்ந்து அமைத்துள்ள கூட்டணி சார்பில் கராச்சி நகரில் நேற்று பிரம்மாண்ட பேரணி நடைபெற்றது. இதில், நவாஸ் ஷெரீப்பின் மகள் மரியம் ஆவேச உரையாற்றினார்.
இந்நிலையில், ஹோட்டல் அறைக் கதவை உடைத்து போலீசார் தன் கணவரை கைது செய்ததாக மரியம் நவாஸ் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். ஊழல் வழக்கில் தலைமறைவாக இருந்ததால் கைது செய்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.