பாகிஸ்தான் ஆறு நிபந்தனைகளையும் நிறைவேற்றத் தவறி விட்டதாக பிரான்ஸ் நாட்டில் இயங்கும் FATF என்ற சர்வதேச நிதிக் கட்டுப்பாட்டு அமைப்பு தெரிவித்துள்ளது.
மசூத் அசார், ஹபீஸ் சையத் உள்ளிட்ட தீவிரவாதிகள் மீது நடவடிக்கை எடுக்க பாகிஸ்தான் அரசு தவறிவிட்டதாகவும் அந்த அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.
பாகிஸ்தான் அரசு பட்டியலில் இருந்து சுமார் 4 ஆயிரம் தீவிரவாதிகள் நீக்கப்பட்டது குறித்தும் அந்த அமைப்பு கேள்வி எழுப்பியுள்ளது. பாகிஸ்தானை கிரே பட்டியலில் வைத்திருப்பதா என்பது குறித்து அந்த அமைப்பு இந்த வாரம் முடிவு செய்யவுள்ளது.