இஸ்லாமியர்களின் புனிதத் தலமான மெக்காவில் தொழுகை நடத்துபவர்களின் எண்ணிக்கையை சவுதி அரசு அதிகரித்துள்ளது.
கொரோனா பரவலை முன்னிட்டு மெக்கா பெரிய மசூதியில் சவுதியைச் சேர்ந்தவர்களும், சவுதியில் உள்ள வெளிநாட்டவரும் தொழுகை நடத்த அனுமதிக்கப்பட்டனர்.
முதலில் நாளொன்றுக்கு 6 ஆயிரம் பேர் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இதனை 30 ஆயிரமாக உயர்த்தி அந்நாட்டு அரசு உத்தரவிட்டிருந்தது. இது முந்தைய நிலையை விட 30 விழுக்காடு அதிகமாகும்.
இந்தநிலையில் நேற்று முதல் 70 விழுக்காடு யாத்ரீகர்களை அனுமதிக்கவும் நவம்பர் 1ம் தேதி முதல் குறிப்பிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு 100 விழுக்காடு தொழுகை நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.