பதப்படுத்தப்பட்டு உறைய வைக்கப்பட்ட உணவு பேக்கிங்கில் உயிர்ப்புடன் இருந்த கொரோனா வைரசை கண்டறிந்ததாக சீனாவின் நோய் கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
உலகிலேயே முதன்முறையாக உணவு பேக்கிங் ஒன்றின் மேற்பகுதியில் உயிருடன் கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதாக அந்த மையம் குறிப்பிட்டுள்ளது.
அண்மையில் கிங்டாவோவில் சிலருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. அங்கு தொற்று பரவியதன் காரணம் குறித்த ஆய்வின்போது, இறக்குமதியான உறைந்த கடல் மீன் பேக்கிங்கில் உயிருடன் இருந்த கொரோனா கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அந்த குறிப்பிட்ட பேக்கிங்கின் மேற்பரப்பில், கொரோனா வைரஸ் இருந்ததாகவும், இதன்மூலமே மேலும் நோய் பரவ வாய்ப்புள்ளதாகவும், நோய்க் கட்டுப்பாட்டு மையம் எச்சரித்துள்ளது.