ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் உள்ள கேளிக்கை பூங்காவில், ராட்சத ராட்டினம் ஒன்று உணவகமாக மாற்றப்பட்டுள்ளது.
கொரோனா அச்சுறுத்தலால், வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் வருகை குறைந்ததால், கேளிக்கை பூங்காக்களில் வியாபாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டது.
இதையடுத்து, உள்ளூர் வாடிக்கையாளர்களை கவர, ராட்சத ராட்டினத்தை, உணவகமாக பூங்கா நிர்வாகம் மாற்றியுள்ளது.
மெதுவாக இயக்கப்படும் ராட்டினத்தில், ஆயாசமாக அமர்ந்து உணவருந்தியவாறே, நகரின் அழகை, மக்கள் உயரத்தில் இருந்து ரசித்து வருகின்றனர்.