பாரீஸ் நகரில் கொரோனா பரவல் காரணமாக சனிக்கிழமை இரவு விருந்துகள் ரத்து செய்யப்பட்டு உணவகங்களும் மதுக்கடைகளும் வெறிச்சோடின.
கொரோனா இரண்டாவது அலையால் பாரிஸ் நகரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
கடந்த வாரம் அதிபர் இமானுவல் மாக்ரான் நான்கு வாரங்களுக்கு இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை ஊரடங்கை அறிவித்தார்.
இரவு நேரப் பார்ட்டிகளால்தான் கொரோனா அதிகம் பரவுவதாக அவர் தெரிவித்தார்.
இதனை பொதுமக்கள் ஏற்றுக் கொண்டு கடைபிடிக்கத் தொடங்கியுள்ள போதும் உணவகம் மற்றும் மதுக்கடை உரிமையாளர்கள் மிகப்பெரிய வருவாய் இழப்பு குறித்து கவலை தெரிவிக்கின்றனர்.