நியூசிலாந்து பொதுத் தேர்தலில் பிரதமர் ஜெசிந்தா ஆர்டன், அமோக வெற்றிபெற்றுள்ளார்.
நியூசிலாந்து நாடாளுமன்ற தேர்தலில் ஜெசிந்தா ஆர்டனின் தொழிலாளர் கட்சி, 50 சதவீத வாக்குகளுக்கும் அதிகமாக பெற்று அமோக வெற்றி பெற்றுள்ளது.
அந்நாட்டில் விகிதாச்சார பிரதிநிதித்துவ முறை தேர்தல் வந்ததன் பிறகு, தனியொரு கட்சி பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைப்பது இதுவே முதல் முறையாக இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
அழுத்தந் திருத்தமாக முடிவெடுக்கும் தலைமைப் பண்பு, நெருக்கடிகளை திறமையாகக் கையாள்வது ஆகிய இரண்டு அம்சங்களும் ஜெசிந்தாவுக்கு நியூசிலாந்தை தாண்டி புகழைப் பெற்றுத் தந்துள்ளன.
நியூசிலாந்தில் கொரோனா பரவலை வெற்றிகரமாக கையாண்டு அதை முறியடித்ததும் ஜெசிந்தாவின் வெற்றிவாய்ப்பை உறுதிப்படுத்தியுள்ளது.
class="twitter-tweet">New Zealand ruling party registers strong start as election counting begins https://t.co/TSTmJT11BF pic.twitter.com/Y5g22ZtoWW
— Reuters (@Reuters) October 17, 2020