உலகளாவிய காற்று மாசுக்கு சீனா, ரஷ்யா, இந்தியா உள்ளிட்ட நாடுகளே காரணம் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் குற்றஞ்சாட்டி உள்ளார்.
வட கரோலினாவில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் உரையாற்றிய அவர், உலகில் அதிகமாக காற்று மாசு ஏற்படுவதற்கு இந்தியா, சீனா, ரஷ்யா ஆகிய நாடுகள் நச்சு வாயுக்களை அதிகமாக வெளியிடுவதே காரணம் என்று குற்றச்சாட்டினார்.
அமெரிக்காவைப் பொறுத்தவரை குறைந்த அளவுதான் காற்றில் மாசுவைக் கலப்பதாக கூறிய அதிபர் ட்ரம்ப், தனது நிர்வாகத்தின் கீழ் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் அதே சமயம், எரிசக்தி உற்பத்தியிலும் தன்னிறைவு அடைந்துள்ளதாக கூறினார்.