பொதுமக்கள் தொடர் போராட்டங்களையடுத்து, கிர்கிஸ்தான் அதிபர் Sooronbay Jeenbekov பதவி விலகினார்.
கடந்த 4ந் தேதி அங்கு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் பெரும் முறைகேடு நடைபெற்றதாக கூறி எதிர்கட்சியினரும் பொதுமக்களும் ஒரு வாரத்திற்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையடுத்து தேர்தல்களை ரத்து செய்த அந்த நாட்டு மத்திய தேர்தல் ஆணையம் அடுத்த மாதம் 6-ஆம் தேதி புதிய தேர்தல் நடத்தப்படும் என்று அறிவித்துள்ளது.