அமெரிக்காவின் வடக்கு கரோலினா மாகாணத்தில் அதிபர் தேர்தலில் வாக்களிப்பதற்காக வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர்.
இந்த மாகாணத்தில் அதிபர் தேர்தலுக்கு முன் கூட்டியே வாக்களிக்கும் முறை நேற்று தொடங்கியது. வாக்காளர்கள் அதிகாலையிலேயே திரண்டு வந்து தனிமனித இடைவெளியை கடைபிடித்தபடி வாக்கு அளித்தனர்.
இந்த மாகாணத்தைச் சேர்ந்த வாக்காளர்கள் செனட் உறுப்பினரையும் தேர்ந்தெடுக்க வாக்களிக்கின்றனர். இதுவரை அமெரிக்காவில் 14.6 மில்லியன் மக்கள் அஞ்சல் மூலமாகவும், நேரிலும் வந்து வாக்களித்துள்ளனர்.