ஸ்வீடன் நாட்டில் இரை தேடிய அணில் ஒன்று பளு தூக்குதலில் ஈடுபட்டது போன்ற புகைப்படங்கள் வெளியாகி உள்ளது.
பிஸ்ப்கார்டன் பகுதியில் வசித்து வரும் Geert Weggen என்பவர் தனது தோட்டத்திற்கு வரும் அணில்களுக்கு இரை வைப்பது வழக்கமாகும்.
இந்நிலையில் சில நாட்கள் முன்பு அணில்கள் விரும்பி சாப்பிடும் பருப்புகளை குச்சி ஒன்றின் இரு முனைகளிலும் சேர்த்து கட்டி வைத்துள்ளார்.
அப்போது பிராவ்னி வகையை சேர்ந்த சிவப்பு அணில் ஒன்று இந்த பருப்பு குச்சியை தனது இரு முன்னங்கால்களாலும் பற்றி இழுத்து தூக்கி கொண்டு ஓடியது.