சமூக வலைதளமான ட்விட்டர் செயலியின் செயல்பாடு உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளது.
கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களை கொண்ட இந்த செயலியில் ஏற்பட்டுள்ள பாதிப்பால் பயனாளர்கள் அவதிக்குள்ளாகினர். உட்கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள சில பிரச்னைகளை சரி செய்து, இயல்பு நிலைக்கு கொண்டு வர தங்களது தொழில்நுட்பக் குழு செயல்பட்டு வருவதாக ட்விட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும், ஹேக் செய்யப்பட்டதற்கான எந்த ஆதாரங்களும் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.