ஏமனில் அரசு மற்றும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் இடையே சுமார் ஆயிரம் கைதிகள் பரிமாற்றப்பட உள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏமன் அரசு மற்றும் அந்நாட்டின் மேற்கு பகுதியை கட்டுப்பாட்டில் வைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் இடையே கடந்த மாதம் சுவிட்சர்லாந்தில் ஐ.நா மேற்பார்வையில் பேச்சு வார்த்தை நடைபெற்றது.
அதில், இருதரப்பிலும் கைதிகளை விடுவிக்க ஒப்புக் கொள்ளப்பட்ட நிலையில், 2 அமெரிக்க பணயக் கைதிகளை ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நேற்று விடுத்தனர்.
அவர்களால் கைது செய்யப்பட்ட மேலும் 400 பேரும், அரசு சிறைபிடித்த 600க்கும் மேற்பட்ட ஹவுதி கிளர்ச்சியாளர்களும் ஒப்பந்தத்தின்படி 2 நாட்களில் விடுவிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.