5 நிமிடத்திற்குள் கொரோனா தொற்றை கண்டறியும் புதிய சோதனை முறையை ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர்.
2021ம் ஆண்டு தொடக்கத்தில் இந்த டெஸ்ட் கிட்கள் தயாரிக்கும் பணிகள் தொடங்கும் என்றும், அதற்கு அடுத்த 6 மாதங்களுக்குள் பயன்பாட்டுக்கு வரும் எனவும் ஆராய்ச்சியாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
தற்போது புழக்கத்தில் உள்ள சோதனைக் கருவிகளைவிட துல்லியமாகவும், விரைவாகவும் இந்த கருவிகள் கொரோனா வைரஸை வேறுபடுத்தி கண்டறிவதாக ஆராய்ச்சியில் தகவல் வெளியாகியுள்ள நிலையில், விமான நிலையங்கள், வணிக நிறுவனங்களில் விரைவான சோதனைகளை மேற்கொள்ள இவை பெரிதும் உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.