வைட்டமின் டி மாத்திரையை எடுத்துக் கொண்டால், உடலில் கொரோனா தொற்றுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்குமா என்பது குறித்து லண்டன் குயின் மேரி பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஆய்வு நடத்துகின்றனர்.
இந்த ஆய்வில் பங்கேற்க ஆட்களை தேர்வு செய்ய உள்ளதாக கூறிய விஞ்ஞானிகள், அவர்களுக்கு ஆறு மாதங்களுக்கு வழக்கத்தை விட அதிகமான வைட்டமின் டி வழங்கப்படும் என தெரிவித்துள்ளனர்.
இந்த ஆய்வு, வைட்டமின் டி கொரோனா தொற்றை தடுக்குமா என்பதற்கான அல்ல எனவும், கொரோனாவுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குமா என்பதே ஆய்வின் இலக்கு என்றும் அவர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.