அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றால் அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய 1 கோடியே 10 லட்சம் பேருக்கு குடியுரிமை வழங்குவேன் என ஜோ பிடன் தெரிவித்துள்ளார்.
நவம்பர் 3ம் தேதி நடைபெற உள்ள அதிபர் தேர்தலுக்கான தீவிர பிரசாரத்தில் அவர் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், வாஷிங்டனில் நடைபெற்ற கூட்டத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவது, வீழ்ச்சியடைந்த பொருளாதாரத்தை கட்டமைப்பது உள்ளிட்ட செயல்திட்டங்களுடன் சட்டவிரோத குடியேறிகளுக்கு குடியுரிமை வழங்குவதும் தனது முதன்மை பணிகளில் ஒன்று என கூறியுள்ளார்.