அஸர்பைஜானுக்கும், ஆர்மீனியாவுக்கும் மீண்டும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.
நாகர்னோ, காரபாக் பகுதி தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே கடந்த மாதம் 27ம் தேதி போர் மூண்டது. இதில் நூற்றுக்கணக்கானவர்கள் உயிரிழந்த நிலையில் ரஷ்யாவின் தலையீட்டினால் போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் நாகர்னோ பகுதியில் உள்ள தங்கள் எரிவாயு குழாயில் நாசம் செய்ய ஆர்மீனியா முயற்சி செய்வதாக அஸர்பைஜான் குற்றம் சாட்டி உள்ளது.
இதனை ஆர்மீனியா மறுத்தாலும், எதிரி விரும்பவில்லை என்றால், தாங்கள் இறுதிவரை போராட தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளது.