அதிபர் டொனால்டு டிரம்ப்பின் ஆதரவாளர்கள் பெயரிலான போலி கணக்குகளை டுவிட்டர் கண்டறிந்து நீக்கி உள்ளது.
டிரம்ப்பின் கருப்பின ஆதரவாளர்கள் என கூறி தொடங்கப்பட்ட கணக்குகள் டுவிட்டர் தளத்தை தவறாக கையாண்டதால் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளது என அந் நிறுவனம் தெரிவித்து உள்ளது.
இடைநீக்கம் செய்யப்பட்ட அக்கவுண்ட்களில் தவறான புகைப்படங்களை பதிவிட்டு, டிரம்ப்பிற்கு வாக்களிக்க கோரும் வகையில் கருத்து பதிவு செய்யப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
இதுபோன்ற நடவடிக்கைகளை கண்டறிய குழுக்கள் பணியாற்றி வருவதாகவும், விதிகளை மீறி பதியப்படும் கருத்துக்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்" என்றும் அந்நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்து இருக்கிறார்.