அர்மீனியா மற்றும் அசர்பைஜான் நாடுகளுக்கு இடையிலான மோதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 500-ஐ கடந்துள்ளது. அவ்விரு நாடுகளுக்கும் இடையே நகோர்னோ-கராபத் மாகாணம் யாருக்கு என்பதில் மோதல் மூண்டுள்ளது.
போரை முடிவுக்கு கொண்டுவர இரு நாடுகளுக்கு இடையே அமைதி ஒப்பந்தம் போடப்பட்டது. ஆனால் ஒப்பந்தத்தை மீறி இருநாடுகளும் ஒருவரை ஒருவர் தாக்கி வருவதால் பலி எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
15 நாட்களுக்கு மேலாக நடைபெற்று வரும் இந்த மோதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 532 ஆக அதிகரித்துள்ளது. இதில் பெரும்பாலானோர் அர்மீனிய ஆதரவு கிளர்ச்சி படையினர் ஆகும்.
சண்டை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், போரை முடிவுக்கு கொண்டுவர ரஷியா, அமெரிக்கா போன்ற நாடுகள் தீவிரம் காட்டி வருகின்றன.