வியட்நாமில், மண் சரிவில் சிக்கியவர்களை மீட்கும் முயற்சியில் ராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த 2 வாரங்களாக பெய்து வரும் கன மழையால் துவா தியென் ஹியு மாகாணத்தில் ஏற்பட்ட 2 மண் சரிவுகளில், 30 க்கும் மேற்பட்டவர்கள் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கடும் போராட்டத்துக்கு பின், அந்த பகுதியை அடைந்த ராணுவத்தினர், மீட்பு பணிகளை தீவிரப்படுத்தினர்.
பல சாலைகளில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளதால், மீட்பு குழுவினருக்கு ஹெலிகாப்டர் மூலம் உணவு வழங்கப்பட்டது.