கொலம்பஸின் அமெரிக்க பயணத்திற்கு நிதி உதவி செய்த அரசி இஸபெல்லாவின் சிலையை தங்கள் பூர்வீக கடவுளரைப் போல் அலங்கரித்து பொலிவிய பெண்ணியவாதிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அய்மாரா, கெச்சுவா பழங்குடியினரின் சோளிடா என்ற கடவுளின் அடையாளமான பொலேராஸ் உடைகள் மற்றும் தொப்பிகளை இஸ்பெல்லா சிலைக்கு அணிவித்த அவர்கள் கொலம்பஸ் சிலையிலும் வண்ண சாயங்களை பூசினர்.
கொலம்பஸ் வருகைக்கு பிறகான காலனிய ஆதிக்கத்தால் பூர்வ குடிமக்கள் கடும் ஒடுக்குதலுக்கு உள்ளானதாக அங்கு போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.