ரஷ்யா முன்னிலையில் ஏற்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி அர்மீனியா மற்றும் அசர்பைஜான் நாடுகள் மீண்டும் மோதலில் ஈடுபட்டு வருகின்றன.
இரு நாடுகளின் எல்லையில் உள்ள நகோர்னோ-கராபத் என்ற மாகாணத்தை மையமாக கொண்டு கடந்த மாதம் 27 ஆம் தேதி முதல் இரு நாடுகளும் மோதலில் ஈடுபட்டன.
இதையடுத்து கடந்த 10-ம் தேதி ரஷிய தலைநகர் மாஸ்கோவில் நடந்த பேச்சுவார்த்தையில் அர்மீனியா-அசர்பைஜான் நாடுகள் இடையே அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டது.
அங்கு அமைதி திரும்பும் என எதிர்பார்த்த நிலையில், போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி இன்று இரு நாடுகளும் மீண்டும் மோதலில் ஈடுபட்டன. சண்டை தொடர்ந்து நீடித்து வருவதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.