கொரோனாவுக்கான கோவாக்ஸ் தடுப்பூசி திட்டத்தில் 180ற்கும் அதிகமான நாடுகள் இணைந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக பேசியுள்ள அந்த அமைப்பின் தலைமை ஆராய்ச்சியாளர் சவுமியா சுவாமிநாதன், ஏழை மற்றும் பணக்கார நாடுகள் என அனைத்திற்கும், கொரோனா தடுப்பூசி வழங்குவதற்கான இத்திடத்திற்கு நிதியுதவி வழங்க, சீனா உள்ளிட்ட நாடுகள் சம்மதம் தெரிவித்துள்ளதாக குறிப்பிட்டார்.
பாதிக்கப்பட்டுள்ள நாடுகளுக்கு தேவையை உணர்ந்து, சரியான நேரத்தில் தடுப்பூசியை கிடைக்கச் செய்வதே, கோவாக்ஸ் திட்டத்தின் இலக்காகும்.