கொரோனா காரணமாக விதிக்கப்பட்ட தடை நீங்கி நிலையில் நடைபெற்ற ரக்பி போட்டியில் ஆஸ்திரேலிய அணியை நியூசிலாந்து அணியினர் வெறுப்பேற்றி வரவேற்றனர்.
இரு அணிகளுக்கும் இடையிலான போட்டி நியூசிலாந்தின் வெலிங்டன் நகரில் உள்ள ஸ்கை விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது.
போட்டிக்கான இரு அணிகளும் களம் இறங்கிய காட்சியே போர்க்களம் போல இருந்தது.
அர்த்த சந்திர வியூகத்தில் வளைந்து நின்று ஆஸ்திரேலிய அணியை, கூர் ஈட்டி வியூகம் வகுத்து எதிர்த்து நின்ற நியூசிலாந்து அணி, பாகுபலி பட பாணியில் வினோத ஓசை எழுப்பி வெறுப்பேற்றி வரவேற்றது.
7 மாதங்களுக்கு பின்னர் நடைபெற்ற போட்டி வெற்றி, தோல்வி இன்றி சமனில் முடிவடைந்தது