சீனா, ஆப்டிகல் ரிமோட் சென்சிங் புதிய செயற்கைகோளை வெற்றிகரமாக அதன் சுற்றுவட்டபாதைக்கு அனுப்பியது.
அந்நாட்டின் ஜிச்சாங் ஏவுதளத்தில் இருந்து காஃபென் -13 செயற்கைக்கோளுடன் மார்ச் -3 பி ராக்கெட் அதிகாலை விண்ணில் பாய்ந்தது.
நில ஆய்வு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, வானிலை முன்னறிவிப்பு உள்ளிட்ட பணிகளுக்கு காஃபென் செயற்கைக் கோள் பயன்படும் என்றும் நடப்பாண்டின் பிற்பகுதியில் தொடர்ந்து 6 ராக்கெட்டுகளை சீனா வெற்றிகரமாக விண்ணுக்கு அனுப்பியதாகவும் ஜிச்சாங் ஏவுதளத்தின் துணை இயக்குநர் வு வீகி கூறினார்.