அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் ஜெட் படகுகள் பந்தயம் விறுவிறுப்புடன் நடைபெற்றது.
ஹண்டிங்டன் கடற்கரையில் இருந்து கேடலினா தீவைச் சுற்றி சுமார் 181 கிலோ மீட்டருக்கு ரம்ரன் ஓஷன் கோப்பை போட்டி நடைபெற்றது.
சுமார் ஆயிரத்து 500 குதிரைத்திறன் கொண்ட ரேஸ் என்ஜின் படகுகள் இந்த பந்தயத்தில் பங்கேற்று சீறி பாய்ந்தன. பந்தயத்தில், லூகாஸ் ஆயில் சில்வர்ஹூக் படகு வெற்றி பெற்றது.