அமெரிக்காவில் டெல்டா புயல் ஏற்படுத்திய பேரழிவுகளை ட்ரோன் கேமரா பதிவு செய்துள்ளது.
மெக்ஸிகோ வளைகுடாவில் உருவான அந்தப் புயல் நேற்று அதிகாலை லூசியானா பகுதியில் கரையைக் கடந்தது. அப்போது மணிக்கு 150 கிலோ மீட்டர் வேகத்தில் வீசிய காற்றினால் மரங்கள், மின்கம்பங்கள் வேரோடு சாய்ந்தன.
மின்சாரம் தடைபட்டதால் லட்சக்கணக்கான மக்கள் அவதிக்குள்ளாயினர்.
இந்நிலையில் டெல்டா புயலின் கோர தாண்டவம் குறித்த ட்ரோன் காட்சிகள் வெளியாகி உள்ளன.