நைஜீரியாவில் எரிவாயு நிரப்பும் ஆலையில் நேர்ந்த தீவிபத்தில் 8 பேர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நைஜீரியாவின் லாகோஸ் நகரில் எரிவாயு நிரப்பும் ஆலையில் வியாழனன்று தீவிபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் அருகில் உள்ள 25 வீடுகள், 16 கடைகள், ஒரு பள்ளிக்கூடம் ஆகியவை தீக்கிரையாயின.
விபத்து நேர்ந்த இடத்தைப் பார்வையிட்ட துணை ஆளுநர் ஒபாபெமி ஹம்சாத், விபத்துக்குக் காரணமானோர் தண்டிக்கப்படுவர் எனத் தெரிவித்தார்.
விபத்தில் 8 பேர் உயிரிழந்ததாகவும் அவர் தெரிவித்தார்.