கிர்கிஸ்தான் நாட்டின் புதிய பிரதமராக சதிர் ஜாபரோவை நியமிக்க அந்நாட்டு நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.
மத்திய ஆசிய நாடான கிர்கிஸ்தானில் கடந்த 4ம் தேதி நடைபெற்ற பொதுத்தேர்தல் முடிவுகளை ரத்து செய்யக்கோரி நடைபெற்ற போராட்டத்தில் நாடாளுமன்றம் சூறையாடப்பட்டது.
இதனையடுத்து தேர்தல் ரத்து செய்யப்பட்டு நாட்டில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டது. இந்நிலையில், நாட்டில் அமைதியின்மையை ஏற்படுத்தியதாக உள்துறை அமைச்சகம் மற்றும் பாதுகாப்புக்குழுவினரால் பிரதமர் அத்தம்பயோ பதவி நீக்கம் செய்யப்பட்டார். தற்போது அந்த பதவிக்கு சதிர் ஜாபரோ நியமிக்கப்பட்டுள்ளார்.