சுற்றுச்சூழலை பாதுகாக்க உறுதியளிக்காத நிறுவனங்களில் இருந்து முதலீடுகளை திரும்பப்பெறுமாறு பொதுமக்களுக்கு போப் பிரான்சிஸ் வலியுறுத்தியுள்ளார்.
வாடிகனில் நடைபெற்ற காலநிலை மாற்றம் குறித்த ஆன்லைன் கருத்தரங்கில் பங்கேற்ற அவர், பேரழிவு தரக்கூடிய பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ள நாம் உடனடியாக தயாராக வேண்டும் என கூறினார்.
சுற்றுச்சூழல் குறித்த கல்வியறிவு, நிலையான விவசாயம் மற்றும் சுத்தமான தண்ணீர் உள்ளிட்டவற்றுக்கான தேவை குறித்து பேசிய அவர், இதை நோக்கமாக கொண்டிராத தொழில் நிறுவனங்களில் இருந்து முதலீடுகளை திரும்பப்பெற வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.