அமெரிக்காவின் லூசியானா மாநிலத்தில் டெல்டா புயல் கரையை கடந்த நிலையில், பல்வேறு இடங்களில் கனமழை கொட்டியது.
மெக்சிகோ வளைகுடாவையொட்டி உள்ள கிரியோல் அருகே டெல்டா புயல் கரையை கடந்ததுடன், வலுவிழந்து மிசிசிப்பி மற்றும் டென்னசி நோக்கி நகர்ந்து வருகிறது.
இதனால் மாநிலத்தின் மத்திய மற்றும் வடகிழக்கு பகுதிகளில் மணிக்கு 150 கிலோ மீட்டர் வேகத்தில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டெக்சாஸின் பியூமண்ட் முதல் லேக் சார்லஸ் வரை உள்ள துறைமுகங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.