பாகிஸ்தானில் இரு கைகளும் இல்லாத இளைஞர் பில்லியர்ட்ஸ் விளையாட்டில் திறமையை வெளிக்காட்டி வருகிறார்.
கிழக்கு மாகாணமான பஞ்சாபில் உள்ள சாமுண்ட்ரி என்ற சிறிய நகரத்தைச் சேர்ந்த முகம்மது இக்ராம் என்பவர் பிறவியிலேயே கைகளை இழந்தாலும் நம்பிக்கையை இழக்காமல் உள்ளார்.
பில்லியர்ட்ஸ் விளையாட்டில் ஆசை கொண்ட அவர், படிப்படியாக நாடிப் பகுதியால் விளையாடி தனது திறமையை மேலும் வளர்த்துக் கொண்டார்.
தற்போது யார் வேண்டுமானாலும் தன்னுடன் விளையாடலாம் என சவால் விடுத்துள்ள இக்ராம், பாகிஸ்தான் அரசு தனக்கு உதவி செய்ய வேண்டும் என்று கோரிக்கையும் விடுத்துள்ளார்.