சிலி நாட்டில் அடுத்தடுத்து 18 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி ஏற்பட்ட விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர்.
லா அரவ்கானியா என்ற பகுதியில் நேற்று காலையில் பனிமூட்டம் அதிகமாக இருந்ததால் அந்தப் பகுதியில் உள்ள நெடுஞ்சாலையில் சென்ற கார், லாரி, டிரக்குகள் என அடுத்தடுத்து வந்த 18 வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக தொடர்ச்சியாக மோதி பெரு விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் தீப்பிடித்த வாகனத்தில் சிக்கிய 2 பேர் உயிரிழந்தனர். 8 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ள நிலையில் அவர்களில் சிலரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.